பேருந்து பயணம்

வணக்கம் அனைவரும் நலமா?
எதையாவது எழுதனுமேன்னு தோணுச்சி அதான் ..
இன்னைக்கு காலையில 9.15மணிக்கு பேருந்து நிலையத்துக்கு வந்தாச்சி ஆனா பேருந்து வழக்கம் போல தாமதமாக வந்தது. நாம லேட்டா வரும் போது மட்டும் சீக்கிரமா வந்துடும்.. 

பத்து நிமிடம் சுற்றி இருந்தவர்களை பார்த்துக்கொண்டிருந்தேன் அழகான பெண்கள்.. கட்டிட வேலைக்கு செல்வதற்க்காக மேஸ்திரி எங்க சொல்ல போறாரோன்னு காத்திருந்த பெண்கள்  வேலைக்கு செல்வதற்க்காக காத்திருந்த அழகான பெண்கள் (வீட்டைவிட்டு வெளியே வரும் பெண்கள் எப்பவுமே அழகுதான்)
ஆண்கள் குறுகுறுவென பார்த்து கொண்டிருந்த நேரத்தில் திருப்பத்தூர் To ஆலங்காயம் JMS பஸ் வந்து சேர்ந்தது  

எப்பவும் இவ்ளோ நேரத்துக்கு பஸ் நிரம்பி வழியும் ஆனா இன்னைக்கு கூட்டம் குறைவுதான்  முன்பக்கத்தில் ஏறி ஒரு அக்காவை உரசிகொண்டு உள்ளே சென்றேன் சீட் இருக்குமா என கண்கள் அலைந்தது ஒரு வழியாக. மூண்று சீட்டுஇருக்கும் பகுதியில் நடுவில் இடம் இருந்தது 
அந்த ஜன்னலோரத்தில் பொதி மாடுபோல ஒருவர் நடுசீட்டையும் ஆக்ரமித்து அமர்ந்திருந்தார் ஏண்டா எரும தள்ளிதான் உட்காரேன்னு சொல்ல தோணிச்சி ஏணோ சொல்லல..
இந்த பக்கம் அவ்ளோ உயரமா ஒரு ஆளு இவன் வந்துட்டானேன்னு யோசிச்ச மாதிரி தெரிஞ்சது முகர 
ஒருவழியா நடுவு ல மாட்டிகிட்டு சீட்டு வாங்க நடுத்துனர் வந்தார் . பர்ஸ் பின்புறம் இருக்கு கையும் பின்னால விட முடியல வேறவழி இரண்டு மலைகளை அசைத்து ஒருவழியாக பர்ஸ் பிடுங்கினேன் 20 ரூபாய் மிட்டூர் நிறுத்தம் வாங்கி கொண்டு மீண்டும் மலைகளை அசைத்து உள் நுழைந்தேன் 

இன்று தேவாவின் இசையை மழைய தூவிகொண்டிருந்தார்கள் ..ஒரு பட பாடல்களாக ஓடிக்கொண்டிருந்தது  அனைத்தும் அருமை 
வழக்கமாக வரும் நர்ஸ் பெண்ணை காணோமே என தேடிப்பார்த்தேன் காணவில்லை ஷிப்ட் மாற்றியிருக்கலாம்.. 

ஒரு வழியாக மட்றபள்ளி நிறுத்தத்தில் இறங்கினார் என் பக்கத்து சீட்டுகாரர் சிறிது நேரத்திற்க்கெல்லாம் ஒரு ஆண்டி இரண்டு குழந்தைகள் ஏறினர் என் பக்கத்தில் குழந்தை அமர்ந்தது பின் எழந்து அவர் அம்மாவை அமர வைத்தது நல்லாதான் இருந்தது ஒரு பத்து நிமிடம் கூட இல்லை அடுத்த நிறுத்ததில் பயணிகள் சீட்டு காலியானதும் அங்கே சென்று அமர்ந்து கொண்டர் லைட்டா பீலிங்தான்...

வேறென்ன செய்ய போன்ல பேஸ்புக் ட்வீட்டர் பேப்பர் பார்த்துட்டு இருந்தேன் தூக்கம் லைட்டா கண்ண கட்டுச்சி  ரைட்டு போன ஆப் பண்ணிட்டு தூங்கிட்டேன்  10.10 க்கு மிட்டூர்...

மீண்டும் சந்திப்போம்....

Comments